சுபாங் ஜெயா, ஜூலை.15-
சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தனது முன்னாள் காதலியைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பபத்தில் ஒரு வெளிநாட்டவரான 21 வயது ஆடவர், பல்கலைக்கழகத்தில் 20 வயதுடைய தனது முன்னாள் காதலியைக் கத்தியால் குத்தியதாகப் புகார் பெறப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
அந்தப் பெண் அனுப்பிய குறுந்தகவலினால் அதிப்தி அடைந்த அந்த ஆடவர், இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








