கோலாலம்பூர், அக்டோபர்.28-
மலேசியாவில் ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெற்று கொண்டு இருக்கும் வேளையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏரோடிரேன் ரயில் பழுதடைந்து போனது, நாட்டின் தோற்றத்திற்கு எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் இஷாம் ஜாலில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தலைவர்களும், பேராளர்களும், ஊடகவியலாளர்களும் அதிகளவில் கோலாலம்பூர் தலைநகரில் குவிந்துள்ள நிலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியிலிருந்து விமான முனையங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்லும் ஏரோடிரேன் பழுதடைந்து இருப்பது பயணிகளை நிச்சயம் அவதிக்குள்ளாக்கி இருக்கும்.
அதுமட்டுமன்றி ஒரு நவீனமயத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் அதன் தோற்றத்திற்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.








