Nov 12, 2025
Thisaigal NewsYouTube
எண்ணெய் விலை லிட்டருக்கு 5 காசு விலை உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

எண்ணெய் விலை லிட்டருக்கு 5 காசு விலை உயர்ந்தது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97, உதவித் தொகை வழங்கப்படாத பெட்ரோல் ரோன் 95 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு தலா 5 காசு உயர்வு கண்டுள்ளது.

அவை முறையே லிட்டருக்கு 3 ரிங்கிட் 25 காசு, 2 ரிங்கிட் 65 காசு மற்றும் 3 ரிங்கிட் 07 காசு என விலை உயர்வு கண்டுள்ளது.

எனினும் உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு என தொடர்ந்து விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News