Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு

Share:

ஜொகூர், ஆகஸ்ட் 06-

தாய், மகன் மற்றும் காதல் ஜோடி ஆகியோரை உட்படுத்திய ஐவர் கைது செய்யப்பட்டது மூலம் ஜோகூர்பாருவில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முடியடித்துள்னர்.

இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.

கடந்த ஜுலை 31 ஆம் தேதி, ஜோகூர்பாரு மற்றும் செரி ஆலம் ஆகிய பகுதிகளில் ஜோகூர் மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் 28 க்கும் 59 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருளை பதுக்கி வைப்பதற்கும், அதனை பெட்டலமாக மடிப்பதற்கும் தரை வீடு ஒன்றை இக்கும்பல் கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளது என்று இன்று ஜோகூர்பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் குமார் விவரித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை