May 24, 2026
Thisaigal NewsYouTube
குற்றத்தை ஒப்புக்கொண்டார்
தற்போதைய செய்திகள்

குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Share:

சுங்கை சிப்புட்,ஆகஸ்ட் 19

வாடகை வீட்டில் இருந்த வாடகைதாரர் ஒருவர் தனது வீட்டு உரிமையாளரைக் கத்தியால் குத்திய குற்றத்தை, இன்று பேராக், சுங்கை சிபுட் மேஜஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொன்டார்.

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, காலை 11 மணிக்கு கம்புங் லாசா அருகே உள்ள வீடொன்றில், 44 வயது முஹம்மது ஹைரோல்னிசம் ஒஸ்மான்-னைக் கத்தியால் குத்தி காயப்படுதியதாக 40 வயது முகமது ஷா ரிசல் யாங், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்டவர் இரப்பர் மரம் சீவும் தொழிலாளி என்பதால், நீதிமன்றம் அவர் ஒருவர் உத்தரவாதத்துடன் 3 ஆயிரத்து 500 ரிங்கிட் பிணை தொகை செலுத்தி பிணையில் வெளியேற அனுமதி வழங்கியது.

பின்னர், அந்த வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டது.

காயமடைந்த முஹம்மது ஹைரோல்னிசம் ஒஸ்மான் சுங்கை சிபுட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related News