Jan 22, 2026
Thisaigal NewsYouTube
ஆதாரங்களை வெளியிட்டார் சைபுடீன்
தற்போதைய செய்திகள்

ஆதாரங்களை வெளியிட்டார் சைபுடீன்

Share:

கெடா மாநிலத்தில் அரிய மண் சுரங்க நடவடிக்கை மோசடி தொடர்பில் தமக்கு தொடர்பு இல்லை என்று மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் மறுத்து வந்த போதிலும் அந்த அரிய மண் வீற்றிருக்கும் கெடா, சிஸ், புக்கிட் எங்காங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நடைபெறும் அந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கையை கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி சனூசி பார்வையிட்டுள்ளார் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த அரிய மண் பகுதிக்கு சனூசி வருகை புரிந்துள்ளார் என்பதை காட்டும் புகைப்படங்களையும் அமைச்சர் சைபுடின் இன்று வெளியிட்டுள்ளார். கெடா மாநிலத்தில் அரிய மண் தொடர்பான சட்டவிரோத சுரங்க நடவடிக்கை நடைபெறுகிறது என்பது மாநில மந்திரி புசார் என்ற முறையில் சனூசிக்கு நன்கு தெரியும் என்பதற்கு இந்தப் புகைப்படங்களே சான்றாகும் என்று சைபுடீன் கூறுகிறார்.

Related News

ஆதாரங்களை வெளியிட்டார் சைபுடீன் | Thisaigal News