வீடு ஒன்று தீப்பற்றிக் கொண்டதில் முதியவர் ஒருவர் கருகி மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் சபா, சிபித்தாங் அருகில் கம்போங் மெலாலியா என்ற இடத்தில் நிகழ்ந்தது. 66 வயதான வோங் ஃபூக் ஆன் என்பவரே இச்சம்பவத்தில் கருகி மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் அடையாளம் கூறினர்.
தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட நிலையில் தப்பிக்க முடியாமல் அந்த முதியவர் தீ ஜுவாலைக்குள் சிக்கியதாக நம்பப்படுகிறது. அந்த முதியவர் தனியொரு நபராக அந்த வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் வீட்டின்முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் சகா கார் 100 விழுக்காடு முற்றாக அழிந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.








