சிலாங்கூர்,ஜூலை 13-
நாட்டில் இணைய பகடிவதை தொடர்பான சம்பவங்கள் குறித்து புகாரளிக்கவும், அதன் நடைமுறைகளை எளிதாக்கவும் MCMC மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமும், அரச மலேசிய போலீஸ் படையும் ஆழமாக ஆராய்ந்து வருகின்றன.
அதற்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை SOP-களை உருவாக்குவது பற்றி இரு தரப்பும் நுண்ணோக்குகின்றன.
இணைய பகடிவதைகளை கையாள 1998-ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடகச் சட்ட திருத்தத்தை மறுஆய்வு செய்வது மற்றும் புதிய சட்டத்தை இயற்ற முனையும் அரசின் ஆக்ககர முனைப்பை MCMC வரவேற்றுள்ளது.
அந்த முனைப்பை நிறைவேற்றவும், மக்களின் பாதுகாப்பை எப்போதும் உறுதிப்படுத்தவும் PDRM-முடனான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என அது கூறியது.
இணைய பகடிவதை சம்பவங்களை களையும் முயற்சியாக, அது குறித்த விழிப்புணர்வை எல்லா தட்டு மக்களிடமும் ஏற்படுத்தும் பொருட்டு, தொடர்பு அமைச்சும், MCMC-யும் நாடு முழுவதும் இயக்கங்களையும், பரப்புரைகளையும் மேற்கொள்ளவுள்ளன.








