அரசாங்க இலாகாக்களுக்கும், ஏஜென்சிகளுக்கும் அனுப்பப்படும் கடிதங்கள் மலாய் மொழியில் இல்லையென்றால் அந்த கடிதங்கள் திருப்பி அனுப்ப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருப்பது மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதற்கு அவர் நடத்தும் அரசியல் நாடகமா? என்று பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் தேசியமொழியாக மலாய், நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டு அமலில் உள்ளது. அரசாங்க இலாகாக்களுக்கு மலாய்மொழியில்தான் கடிதம் எழுத வேண்டும் என்பது நடப்பில் உள்ள பொது வான விதிமுறையாகும். ஆனால், அந்த நடைமுறையை பிரதமர் அன்வார் மறுபடியும் நினைவுறுத்த வேண்டிய அவசியம்தான் என்ன ? என்று டாக்டர் இராமசாமி கேள்வி எழுப்பினார்.
அத்தியாவசிய காரணமே இல்லாத ஒரு விவகாரத்தை அன்வார் வலிந்து திணிக்கிறார் என்றால் அரசியல் காரணங்களுக்கான அவர் போடும் வேஷமா? என்று டாக்டர் இராமசாமி சீறிப் பாய்ந்துள்ளார்.
அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் புலமைப்பெறவும் அதிக அளவில் தற்போது ஊக்குவிக்கப்ப்டடு வருகிறது.
மலாய்க்கார மாணவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் போதனா மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க அரசாங்க இலாகாக்களுக்கு மலாய்மொழிகளில் சமர்ப்பிக்கப்படும் அல்லது அனுப்பப்படும் கடிதங்களை பிரதமர் அன்வார், திடீரென்று நிராகரிக்கச் சொல்வது ஏன் என்று டாக்டர் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.








