Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சாரா அடிப்படை உதவித் திட்டம்: இரண்டு நாளில் 17 லட்சம் பேர் 110 மில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டனர்
தற்போதைய செய்திகள்

சாரா அடிப்படை உதவித் திட்டம்: இரண்டு நாளில் 17 லட்சம் பேர் 110 மில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டனர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.02-

சும்பாங்கான் ஆசாஸ் ரஹ்மா எனப்படும் சாரா அடிப்படை உதவித் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு நாட்களில் 17 லட்சம் பேர், தங்களுக்கான அடிப்படைப் பொருட்களை வாங்குவதில் 110 மில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டுள்ளனர்.

சுமார் 22 மில்லியன் மக்களுக்கு வழங்கும் ரொக்க நிதி உதவித் திட்டமான சாராவின் கீழ் நேற்று செப்டம்பர் முதல் தேதி மட்டும் 60 மில்லியன் ரிங்கிட்டை மக்கள் செலவிட்டுள்ளனர்.

இரண்டு நாட்களில் மட்டும் 17 லட்சம் பேர் பலன் பெற்றுள்ளனர் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதிவான பரிவர்த்தனைகளின் அதிகரிப்பைத் தொடர்ந்து, மைகாசேவினால் செயல்படுத்தப்பட்ட கணினித் திறன் அதிகரிப்பால் நேற்று திங்கட்கிழமை 20 விழுக்காடு கூடுதல் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சாரா உதவி உள்ளீடுகளின் அதிகரிப்புத் திறன் இருந்த போதிலும், பல இடங்களில் பரிவர்த்தனைச் செயலாக்க நெரிசலை அனுபவித்து வருகிறது. நகர்ப்புறங்களில் உள்ள பல ஹைப்பர் மார்க்கெட் பேரங்காடிகள் பிற்பகல் 1 மணி முதல் 2.30 மணி வரையிலான உச்ச நேரங்களில் மக்களின் கடும் நெரிசலை எதிர்நோக்கியுள்ளன என்று நிதி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, மைகாசே ஊழியர்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகளில் பணிக்கு அமர்த்தப்பட்டு, நேரடியாகப் பிரச்சினைகளைத் தீர்த்து பேரங்காடிகளுக்கு உதவி வருகின்றனர்.

Related News