Jan 21, 2026
Thisaigal NewsYouTube
10 மலேசியர்கள் பாதுகாப்பாக தாயகம் வந்தடைவர்
தற்போதைய செய்திகள்

10 மலேசியர்கள் பாதுகாப்பாக தாயகம் வந்தடைவர்

Share:

இந்தியா​வில் இமாச்சலப் பிரதேசத்தில் அடை மழை மற்றும் வெள்ளத்தினால் சிக்கி பரிதவிப்பதாக கூறப்பட்ட பத்து மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது. தொடக்கத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 12 மலேசியர்கள் என்று கூறப்பட்டது. எனினும் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் மொத்த எண்ணிக்கை பத்து பேர் என்று விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது. எஞ்சிய இருவர் மலேசியர்கள் அல்ல என்றும் / அவர்கள், அந்த பத்து மலேசியர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் ​​சீன மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர்களில் ஒருவருடன் தொடர்பு கொண்ட மலேசிய ​தூதரகம் உறுதிப்படுத்தியது. அந்த பத்து பேரும் சிம்லாவிற்கு அருகில் உள்ள குல்லு பள்ளத்தாக்குப் பகுதியான மனாலியில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் இன்று வியாழக்கிழமை சிம்லாவிலிருந்து டில்லி வந்தடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்