Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மூவர் உயிரிழந்தனர், இதர மூவர் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூவர் உயிரிழந்தனர், இதர மூவர் படுகாயம்

குவாந்தன்,செப்டம்பர் 30-

பகாங், பென்டாங் அருகில் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 42 ஆவது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த 7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இதர மூவர் படுகாயம் அடைந்தனர்.

நான்கு கார்கள், இரண்டு டிரெய்லர் லோரிகள், ஒரு லோரி சம்பந்தப்பட்ட இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 4.13 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்டை இலாகாவின் பொது உறவு அதிகாரி சுல்ஃபாதில் ஜகாரியா தெரிவித்தார்.

இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

40 வயது முகமட் ரிட்சுவான் சுல்காஃப்லி , 39 வயது முஹம்மது ஜைமி ஷெரீப் மற்றும் 23 வயது முஹம்மது அஜிசு ஃபிட்ரி முஹமட் ஜைரி ஆகிய மூன்று ஆடவர்கள் இந்த விபத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

மேலும் மூன்று ஆடவர்களும் இரண்டு பெண்களும் கடும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் இதர ஐவர் காயமின்றி உயிர்த் தப்பியதாக அவர் குறிப்பிட்டார். என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →