Dec 9, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டில் உண்மையில்லை: அந்தோணி லோக் விளக்கம்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டில் உண்மையில்லை: அந்தோணி லோக் விளக்கம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.09-

போக்குவரத்து குற்றங்களுக்காக ஜேபிஜே சம்மன்களுக்குத் தீர்வு காணப்படாத வாகனமோட்டிகள், குறைந்த விலையில் பெட்ரோல் பெறும் பூடி95 சலுகையை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுவது உண்மையல்ல என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

ஜேபிஜே சம்மன்களுக்குத் தீர்வு காணப்படாத விவகாரமும், பெட்றோல் பூடி95 சலுகையும் வெவ்வேறு விவகாரங்களாகும். இரண்டுக்கும் தொடர்பு இல்லை.

இரண்டு விவகாரங்களையும் ஒன்று மற்றொன்றுடன் தொடர்புப்படுத்த வேண்டியதில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பூடி95 சலுகையானது, செயல்பாட்டில் உள்ள வாகனமோட்டும் லைசென்ஸ்தாரர்கள், தங்களின் மைகாட் அட்டையைப் பயன்படுத்தி, இயல்பாகவே அந்தச் சலுகையைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News