Oct 6, 2026
Thisaigal NewsYouTube

மூடப்பட்ட விடுதியில் 24 மணி நேர ‘கால் சென்டர்’ – 98 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூடப்பட்ட விடுதியில் 24 மணி நேர ‘கால் சென்டர்’ – 98 பேர் கைது

குவாந்தான், சுங்கை லெம்பிங் அருகே மூடப்பட்டிருந்த ஒரு விடுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக நம்பப்படும் ‘கால் சென்டர்’ மீது குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் 95 வெளிநாட்டினர் உட்பட 98 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரில் 88 பேர் சீனப் பிரஜைகள், தலா இருவர் மியன்மார் மற்றும் இந்தோனேசியப் பிரஜைகள், மேலும் ஹாங்காங், வியட்நாம், கம்போடியா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். மூன்று உள்ளூர் பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

புலனாய்வின் அடிப்படையில் நேற்று நண்பகல் 12.50 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், 120 கணினிகள், 100 கைப்பேசிகள், 49 சீனக் கடப்பிதழ்கள், ஒன்பது பயன்படுத்தப்படாத சிம் அட்டை பொட்டலங்கள், 11 ‘ஸ்டார்லிங்க்’ சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பல் மூன்று மாதங்களாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுவதாகவும், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக மூடப்பட்ட விடுதியைப் பயன்படுத்தியதாகவும் டத்தோ ஸாகாரியா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →