மலாயா கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சின் பெங்குடன் ஜசெக கட்சியின் சில தலைவர்களைத் தொடர்புபடுத்தியதாகக் கூறப்படும் தேசிய முன்னணியின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு லிம் குவான் எங்கை பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த கெலுகோர் ஏரி நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜன் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக பாஸ் கட்சியைச் சேர்ந்த கெப்பாள பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா மீது லிம் குவான் எங், திரேசா கோக் போன்ற ஜசெக கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சட்ட நடவடிக்கையில் இறங்கினர்.
கடந்த 15 வது பொதுத் தேர்தலின்போது தேசிய முன்னணி ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தது. அதில் சின் பெங், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ, ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் குவான் எங் ஆகியோரும் உறவுக் காரர்கள் எனக் குறிப்பிட்டிருந்ததை வான் சைபுல் சுட்டிக் காட்டினார்.
அதன் தொடர்பில், தேசிய முன்னணி மீதும் லிம் குவான் எங் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வான் சைபுல் வலியுறுத்தினார்.








