ஜோகூர் பாரு, டிசம்பர்.12-
இன்று பிற்பகலில் பெய்த கனத்த மலையில் ஜோகூர் பாருவில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, பாதசாரிகளையும், வாகனமோட்டிகளையும் பெரும் அவதிக்குள்ளாக்கியது.
சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு விழுந்துள்ளன. வெள்ளம் குறித்த காணொளிகள் சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய அடை மழை ஜோகூர் பாருவில் ஜாலான் ஆயர் கோலாம், நோங் சிக், ஜாலான் சுங்கை சாட் மற்றும் தாசேக் மெர்டேக்கா முதலிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடின.
ஜோகூர் பாரு மாநகர் மன்ற சதுக்கத்தில் பிரதான மேடையின் கூரை சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








