கிள்ளான், ஜனவரி.07-
ஆடவர் ஒருவர், தனது வீட்டில் அடையாளம் தெரியாத சந்தேகப் பேர்வழியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிள்ளான், தாமான் வங்சா வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
இதில் 43 வயதுடைய உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில துணை போலீஸ் தலைவர் முஹமட் ஸைனி அபு ஹசான் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபரை, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகப் பேர்வழி சுட்டுக் கொன்றதாகத் தெரிய வந்துள்ளது.
அவரின் உடலில் இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த பின்னர் அந்த சந்தேகப் பேர்வழி அங்கிருந்து தப்பியுள்ளார். சவப் பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டதாக முஹமட் ஸைனி குறிப்பிட்டார்.








