சம்யூனிஸ்டு தலைவருக்கும் ஜசெக உயர் மட்டத் தலைவர் குடும்த்தாருக்கும் தொடர்பு இருப்பதாக Kepala Batas நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ஜசெக-வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சித்தி மஸ்துராவின் கூற்று பொய்யானதாக இருந்தாலும் அவரது நோக்கம் அவதூறு பரப்புவதாக இல்லை எனக் கூறினார்.
தாமும் லிம் குவான் எங்கும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அந்தக் குற்றச் சாட்டும் மட்டும் சித்தி மஸ்துரா கூறி இருந்தால், அது அவதூறு வழக்காகும். லிம் குவான் எங்கும், லிம் கிட் சியாங்கும் கம்யூனிஸ்டு இல்லை. மேலும், அவர்கள் ஜசெக கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும், எந்தப் பிரச்சனையும் இல்லை என அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
தம்மீது சித்தி மஸ்துரா கூறிய அவதூறான கூற்று குறித்து வினவப்பட்டபோது, அதைப் பற்றி தாம் கவலை படுவதில்லை என அந்தோணி லோக் மேலும் சொன்னார்.








