லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஆளாகியுள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும் என்று மசீச இன்று வலியுறுத்தியுள்ளது.
லஞ்ச ஊழலை வேரறுப்பற்கு உறுதி பூண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசங்கத்தின் தோற்றத்தைப் பாதிக்க செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மனித வள அமைச்சர், தமக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் விடுப்பில் செல்வதே உத்தமம் என்று மசீச பேச்சாளர் மைக் சொங் யியூவ் சுஹன் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தைத் தாங்கி பிடித்துள்ள முக்கியத் தூண்களில் ஜசெக முதன்மையாக திகழ்கிறது. அந்தக் கட்சியில் சேர்ந்த ஒருவர், லஞ்ச ஊழல் விசாரணைக்கு ஆளாகியிருப்பது, கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மைக் சொங் குறிப்பிட்டார்.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


