May 21, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டுத் திட்டத்தில் மோசடி புரிந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

முதலீட்டுத் திட்டத்தில் மோசடி புரிந்த நபர் கைது

Share:

ஒரு கோடியே 10 லட்சம் வெள்ளி முதலீட்டுத் திட்டத்தில் மோசடி புரிந்ததாக நம்பப்படும் நிறுவன இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

57 வயதுடைய அந்த நபர், அலோர் ஸ்டார் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக கோத்தா ஸ்டார் இடைக்கால போலீஸ் தலைவர் ஷெட் பஸ்ரி ஷெட் அலி தெரிவித்தார்.

ஒரு நிறுவனத்தின் பெயரில் 10 திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறி, இந்த மோசடி வேலைகளில் சம்பந்தப்பட்ட நபர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷெட் பஸ்ர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நபரின் முதலீட்டுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 80 பேர் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related News