ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் பாரிசான் நேஷனலின் உறுப்புக்கட்சிகளான மஇகா மற்றும் மசீச.விற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜஹிட் ஹமிடி இன்றிரவு அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கும், மசீச.விற்கும் வாய்ப்பு வழங்கப்படாது என்ற கூறப்பட்டுள்ள வேளையில் துணைப்பிரதமரான அகமட் ஜாஹிட்டின் இந்த அறிவிப்பு, ஏற்கனவே கூறப்பட்ட ஆருடத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மஇகாவும், மசீச.வும் சொந்த தொகுதிகளை கொண்டுள்ளன. அந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அவற்றுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


