லிப்பிஸ், செப்டம்பர்.01-
ஹைலக்ஸ் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி தடம் புரண்டதில் இரண்டு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பகாங், லிப்பிஸ், கம்போங் தஞ்சோங் காஹாய், அக்ரோபோலிட்டன் காஹாய் தோட்டத்தின் பிரதான சாலையில் நிகழ்ந்தது.
கடும் காயங்களுக்கு ஆளான 24, 26 வயதுடைய இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டதாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.








