சிலாங்கூர் மாநிலம் ஸ்ரீ கேம்பாங்கன் பகுதியில் உள்ள மொத்த சந்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்து முழுமையாக அணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, காரணத்தைக் கண்டறியும் தடயவியல் விசாரணைகளுக்கு உதவுவதற்காக தீயணைப்புத்துறையின் கே9 மோப்ப நாய் பிரிவு களமிறக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் 90 சதவீதப் பகுதி தீயில் கருகி நாசமான இச்சம்பவத்தில், தடயங்களைத் தேடும் பணியில் 'ரஸ்டி' மற்றும் 'சாம்' எனப்படும் இரண்டு மோப்ப நாய்கள் தடயவியல் அதிகாரிகளுக்கு உதவி வருகின்றன.
முன்னதாக, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் கூறுகையில், தீ நேற்று நள்ளிரவு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இன்று அதிகாலை 6.20 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,








