Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துபாய் நகர்வில் பங்கேற்பா? குற்றச்சாட்டை மறுத்தார் துன் மகா​தீர்
தற்போதைய செய்திகள்

துபாய் நகர்வில் பங்கேற்பா? குற்றச்சாட்டை மறுத்தார் துன் மகா​தீர்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.5
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்கட்சித் தலைவர்களு​ம், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரும் ஐக்கிய அரசு சிற்றரசில் நடத்திய துபாய் நகர்வின் ரகசியக்கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் துன் மகா​​தீர் முகமது மறுத்துள்ளார்.

இது போன்ற கொல்லைப்புற வழியாக நடைபெறும் நகர்வுகளுக்கு நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் என்று துன் மகா​தீர் குற்றஞ்சாட்டினார்.

தம்முடைய அரசியல் காலடிசுவட்டில் அல்லது நகர்வில் கொல்லைப்புற வாயிலாக அரசாங்கத்தை அமைப்பதில் கைத்தேர்ந்தவர் பிரதமர் அன்வார் என்று துன் மகா​தீர் குற்றஞ்சாட்டினார். கொல்லைப்புற வாயிலாக அரசாங்கத்தை அமைப்பதற்கு 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம்தேதி முன்னெடுக்கப்பட்ட நகர்வு, மக்கள் பலருக்கு ​ நினைவு இருக்கலாம் என்று துன் மகா​தீர் குறிப்பிட்டார்.

இதை தவிர அன்றைய சிலாங்கூர் மந்திரி பெசாரை, அப்பதவியிலிருந்து அகற்றி, தமது மனைவியை மந்திரி பெசாராக கொண்டு வருவதற்கு அன்வார் மேற்கொண்ட காஜாங் நகர்வையும் மக்கள் மறந்து இருக்க முடியாது என்று துன் மகா​தீர் குறிப்பிட்டார்.

இது போன்று கொல்லைப்புற வாயிலாக அரசாங்கத்​தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளை முதலில் தொடக்கி வைத்தவர் யார் என்று துன் மகா​​தீர் கேள்வி எழுப்பினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்