மிக மோசமான வானிலை காரணமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் KLIA 2 இல் பயணிகள் புறப்பாடு பகுதியின் Skybridge Departure Level 3 இல் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் அதன் சீரமைப்புப்பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக Malaysia Airports Holdings Berhad தெரிவித்துள்ளது.
சீரமைப்புப்பணிகள் முடிவுற்று, பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்படும் வரையில் அப்பகுதி முழுமையாக மூடப்படுவதாக அந்த விமான நிலைய பராமரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.








