Oct 16, 2026
Thisaigal NewsYouTube

63 பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
63 பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளான்

நவ. 17-

JOHOR, Sri Gadingஇல் உள்ள ஒரு பள்ளியின் எஸ்பிஎம் தேர்வெழுதவிருக்கும் 17 வயது மாணவன், பத்து பாஹாட் நீதிமன்றத்தில் 63 பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளான். அம்மாணவன், இளம் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், குழந்தைப் பாலியல் காட்சிகளை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.

ஏழு சக மாணவர்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குர்றஞ்சாட்டப்பட்டுள்ள அம்மாணவன், அவற்றை பள்ளி, மசூதி கழிப்பறை, பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளில் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாணவன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 20 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், குழந்தைப் பாலியல் காணொலிகளை வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →