ஷா ஆலாம், ஆகஸ்ட்.04-
ஆடவர் ஒருவரிடம் வழிப்பறிக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் ஒருவன், வளைத்துப் பிடிக்கப்பட்டான்.
ஆடவரிடம் நடத்தப்பட்ட கொள்ளை முயற்சியின் போது, அந்த நபர் எதிர்த்துப் போராடியதால் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த அவன், பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டான்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் ஷா ஆலாம், ஜாலான் செத்தியா பிரிமா HU13/H என்ற இடத்தில் நிகழ்ந்தது. 30 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் அந்த சந்தேகப் பேர்வழி பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைப் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.








