Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் முதல் வாயு வகை மருந்து பதிவு கண்டது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் முதல் வாயு வகை மருந்து பதிவு கண்டது

Share:

மலேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையமான PBKDஇல் மலேசியாவின் முதல் வாயு வகை மருந்தான Linde Medicinal Air 100% அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 1 முதல், எல்லா மருந்துகளும் இந்த ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் எனும் விதிமுறை நடப்புக்கு வந்தததைத் தொடர்ந்து இந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த டிசம்பர் 1 ஆம் நாள் நடந்த ஆணையத்தின் சந்திப்புக் கூட்டத்தில், அந்தப் புதிய வாயு வகை மருந்து தொடர்பான விரிவான விளக்கமளிப்பு, மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது என சுகாதார அமைச்சின் தலிமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

இதுவரை, இந்த வாயு மகை மருந்தை உற்பத்தி செய்யும் 12 உற்பத்தியாளர்கள் மீது சோதனை செய்யப்பட்டு, தரமான மருத்துவ வாயுவை தொடர்ந்து உற்பத்தி செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தேசிய மருந்து ஒழுங்குமுறைப் பிரிவு NPRAஇன் தாங்கள் தயாரித்த மருந்துக்கான பதிவு விண்ணப்பத்தையும் சமர்ப்பித்துள்ளார்.

அதனை உள்ளூர் பயன்பாட்டிற்காக வெளியிட NPRA மேலும் பல பதிவு விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து வருகிறது.

Linde Medicinal Air 100% மருத்துவ வாயுவானது, நோயறிதல் நோக்கங்கள் உட்பட பல மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

Related News