புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவராக கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று அவர் பதவி ஏற்க உள்ளார் என நாட்டின் தலைமை அரசாங்கச் செயலாளர் முகமட் ஸுகி அலி தெரிவித்தார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி கட்டாய பதவி ஓய்வுப் பெற்ற முன்னாள் கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவரை அடுத்து கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமிக்கப் பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
59 வயதான கமருல்ஸமான் மாட் சலேஹ், நகராட்சி ஊழியராக 1991 ஆம் ஆண்டு பணிப்புரிய தொடங்கி, 32 வருட அனுபவம் கொண்ட ஒரு மனிதர் என தலைமை அரசாங்க செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.








