கோலாலம்பூர், செப்டம்பர்.25-
தனது நிர்வாணப் படங்களை மாணவர்களுக்கு அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவருக்கு எதிரான விசாரணை கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் உள்ளது என்று அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு அந்த பேராசிரியருக்கு எதிராக எத்தகை நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தற்போது விசாரணை குழுவினர் அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
இது போன்ற பாலியல் தொல்லைகளிலிருந்து பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டிய கடப்பாட்டில் பல்கலைக்கழக நிர்வாகம் இருப்பதாக அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








