Jun 7, 2026
Thisaigal NewsYouTube
மாயமான ஜஸ்லிண்டா பத்திரமாக மீட்பு: ஓராங் அஸ்லி பூர்வக்குடி மக்களிடம் போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

மாயமான ஜஸ்லிண்டா பத்திரமாக மீட்பு: ஓராங் அஸ்லி பூர்வக்குடி மக்களிடம் போலீசார் விசாரணை

Share:

தாப்பா, ஜூன்.07-

குனோங் பத்து பூத்தே பகுதியில் இரண்டு வாரங்களாகத் தேடப்பட்டு வந்த மலையேற்ற வீராங்கணை ஜஸ்லிண்டா சலுடினைப் பாதுகாப்பாக மீட்ட ஓராங் அஸ்லி பூர்வக்குடி மக்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், ஜஸ்லிண்டாவின் உடல்நிலை சீராகும் வரை அவரது வாக்குமூலத்திற்காகவும் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இது குறித்து தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் வெளியிட்டுள்ள தகவலில், 49 வயதான ஜஸ்லிண்டா தற்போது தாப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காட்டில் நீண்ட நாட்கள் தவித்ததால் அவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 24-ஆம் தேதி குனோங் பத்து பூத்தே பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது ஜஸ்லிண்டா காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார்.

அதன் பிறகு சுமார் இரண்டு வாரங்கள் தேடலுக்குப் பிறகு, நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஓராங் அஸ்லி குழுவினரால் அவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News