அடுக்குமாடி வீட்டில் ஏறுவதற்கு லிப்டிக்குள் நுழைந்த தம்பதியர் மீது எரிதிரவ வீச்சு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 62 வயது மாதுவிற்கு பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.
62 வயதுடைய சாய்ரா அப்துல்லா என்ற அந்த மாது கடந்த ஜுலை 4 ஆம் தேதி பத்துகேவ்ஸ், கம்போங் லக்சமனாவில் உள்ள லக்சமனா ஜெயா அப்பார்ட்மென்ட் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவ த்தில் 37 வயது இனாம் உல்லாஹ் என்ற பாகிஸ்தாானிய ஆடவரும், அவரின் மனைவியான உள்ளூரை சேர்ந்த 60 வயதுடைய ஜெமிலாஹ் சப்டா என்பவரும் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
ஜெமிலாஹ் சப்டா மீது நடத்தப்பட்ட எரிதிரவ வீச்சுக்கு சாய்ரா அப்துல்லாவிற்கு 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் இனாம் உல்லாஹ் மிற்கு எதிராக நடத்தப்பட்ட எரிதிரவக வீச்சுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


