Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சிறுவன் சித்ரவதை: தாயாரும், வளர்ப்புத் தந்தையும் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிறுவன் சித்ரவதை: தாயாரும், வளர்ப்புத் தந்தையும் கைது

கங்கார், ஜூன்.24-

ஆறு வயது சிறுவன், சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பில் அவரின் தாயார் மற்றும் வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டனர். பெர்லிஸ், கங்கார், சிம்பாங் அம்பாட், கம்போங் டத்தோ அஹ்மாட் மூசாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் 37 வயது நபரும், அவரின் 27 வயது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரையும் நான்கு நாள் தடுத்து வைப்பதற்கான நீதின்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி உஷாரிஃபுடின் முகமட் யுசோப் குறிப்பிட்டார்.

அந்தச் சிறுவனின் தாத்தா அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்தச் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →