Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆட்சேப பேரணிக்கு எதிராக போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆட்சேப பேரணிக்கு எதிராக போலீஸ் புகார்

Share:

மலேசியாவை காப்பாற்றுவோம் என்ற சுலோகத்தை தாங்கி, பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவினரால் கோலாலம்பூர் மாநகரில் நாளை செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மலேசிய தினத்தையொட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆட்சேப பேரணிக்குக்கு எதிராக போலீசார் 22 புகார்களை பெற்றுள்ளனர். இந்த பேரணி நடத்துதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் தான் செரி ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வர்த்தகத் தளங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் இப்புகார்களை செய்து இருப்பதாக ரசாருடின் ஹுசெயின் குறிப்பிட்டார். இதனிடைய இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தப் போவதாக கூறி அறிவித்துள்ள சிவப்பு சட்டை கும்பலுக்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று ஐஜிபி தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருவது, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது ஆகியவற்றை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் சோகோ பேரங்காடி முன் இந்த ஆட்சேப பேரணியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News