கோலாலம்பூர், ஜனவரி.11-
சிலாங்கூர், பண்டார் ஶ்ரீ புத்ரா இடைநிலைப்பள்ளியில் மாணவர்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் ஏற்படும் இட நெருக்கடியைக் குறைக்க, குறுகிய காலத் தீர்வாக 10 புதிய வகுப்பறைகளைக் கட்ட கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த வகுப்பறைகள் விரைவாகக் கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்ய, நவீன 'தொழில்துறை கட்டுமான முறையான IBS பயன்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, இதே பள்ளியில் இதே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு மாடி கூடுதல் கட்டடம் ஒன்றைக் கட்டவும் கல்வி அமைச்சு திட்டமிட்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் சூழலையும் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில், கல்வி அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு இந்த முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.








