Apr 9, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் 18 முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு ரயில் அட்டவணையை KTMB மாற்றி அமைக்கிறது
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் 18 முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு ரயில் அட்டவணையை KTMB மாற்றி அமைக்கிறது

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு இரட்டைத் தடம் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் காரணமாக, வரும் ஏப்ரல் 18 முதல் தனது ரயில் சேவை அட்டவணையில் மாற்றங்களைச் செய்யவுள்ளதாக மலாயன் ரயில்வே பெர்ஹாட் அறிவித்துள்ளது.

புலாவ் செபாங்- பத்து கேவ்ஸ் தடம், காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் ரயில் சேவைகள் 15 முதல் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளன.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மிட் வேலி - புலாவ் செபாங் மற்றும் புலாவ் செபாங் - பண்டார் தாசிக் செலாத்தான் ஆகிய தடங்களில் ரயில் சேவைகள் இயங்காது.

சாலாக் செலாத்தான் மற்றும் சிரம்பான் இடையிலான தடம், தீவிர மேம்பாட்டுப் பணிகளுக்காக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழுமையாக மூடப்படும். மேலும் JB சென்ட்ரல் - KL சென்ட்ரல் இடையிலான இரண்டு மின்சார ரயில் சேவைகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, JB சென்ட்ரலில் இருந்து மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு இரவு 7:20 மணிக்கு KL சென்ட்ரல் வந்தடையும். KL சென்ட்ரலில் இருந்து இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12:20 மணிக்கு JB சென்ட்ரல் சென்றடையும் என்று மலாயன் ரயில்வே பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News