கோலாலம்பூர், நவம்பர்.02-
பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு கல்வி அமைச்சு முழு பொறுப்பேற்கிறது என்று அதன் அமைச்சர் ஃபட்லீனா சீடேக் இன்று உறுதி அளித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சாக்கடை குழிக்குள் மாணவர் ஒருவர், விழுந்து, உயிரிழந்த சம்பவத்தற்கு NFA எனப்படும் மேற்கொண்டு நடவடிக்கை இல்லை என்று வகைப்படுத்தப்பட்ட போதிலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பெரும் பொறுப்பை கல்வி அமைச்சு ஏற்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








