அலோர் ஸ்டார், ஜூலை.22-
லோரி பராமரிப்பு, பழுதுப் பார்த்தல் பணி என்று கூறி, போலியான பணக் கோரல்களை முன் வைத்ததாகக் கூறப்படும் கெடா மாநிலத்தில் உள்ள ஓர் அமைப்பின் நிர்வாகியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
1,200 ரிங்கிட்டைக் கோரியது தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அந்த நபர், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெடா மாநில எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
அந்த நபர், இன்று அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மாஜிஸ்திரேட் எலியானா இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவரை வரும் ஜுலை 25 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.








