பாசீர் சாலாக், ஆகஸ்ட்.17-
பாதுகாப்புப் படையினரும் இராணுவப் படையினரும் தங்கள் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹமட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார். அதிகார முறைகேடல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் அது நாட்டின் பாதுகாப்புப் படைகளின் பிம்பத்தைப் பாதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஓப் சோஹோர் சோதனையின் மூலம், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு மூத்த இராணுவ அதிகாரி உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார். இந்தச் சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும், தவறிழைக்கும் அதிகாரிகளுக்குத் தற்காப்புப் படைகள் துணை நிற்காது என்றும் அவர் கூறினார்.








