May 24, 2026
Thisaigal NewsYouTube
போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார்
தற்போதைய செய்திகள்

போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார்

Share:

பட்டர்வொர்த் , ஆகஸ்ட் 20-

80 வயது அத்தையைக் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தது தொடர்பாக போலிஸிடம் பிடிப்பட்ட 43 வயது ஆடவர், பினாங்கு மருத்துவமனையில் இன்னும் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு, தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அந்த ஆடவர் சுயநினைவில்லாமல் இருப்பதால், நேற்று அவர் போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக செபெராங் உத்தாரா துணை போலிஸ் தலைவர் கண்காணிப்பாளர் சி.தர்மலிங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், பினாங்கு, கேபாலா படாஸ், பெகன் தரத் -டில் நேர்ந்த அச்சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்கள் மேல் நடவடிக்கைக்காக அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

Related News