கோத்தா பாரு, செப்டம்பர்.06-
சபாவைச் சேர்ந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் மரண விசாரணை முடியும் வரையில் புதியதாக வேறு யாரையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட உத்தேசமில்லை என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த மாணவியின் மரணம் தொடர்பில் பகடிவதையில் ஈடுபடுபட்டதாக இதுவரை ஐந்து மாணவிகள் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று சட்டத்துறை தலைவர் முகமட் டுஸுகி மொக்தார் தெரிவித்தார்.
இந்த ஐந்து மாணவிகளைத் தவிர வேறு யாரையும் குற்றச்சாட்ட தற்போதைக்கு சட்டத்துறை அலுவலகம் உத்தேசிக்கவில்லை என்று கோத்தாபாருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் முகமட் டுஸுகி இதனைக் குறிப்பிட்டார்.








