குவாந்தான், பிப்ரவரி.10-
ரொம்பினிலுள்ள கோலா ரொம்பின் பகுதியில், பகாங் மாநில சுல்தானுக்குச் சொந்தமான நிலத்தில், அத்துமீறி நுழைந்த 21 ஓராங் அஸ்லியினரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நிலத்தை மேம்படுத்த நியமிக்கப்பட்ட தரப்பிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 26 முதல் 60 வயதுக்குட்பட்ட 4 ஆண்களும், 17 பெண்களும் கைது செய்யப்பட்டதாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் ஷாய் ஷாரிஃப் மொண்டோய் தெரிவித்துள்ளார்.
718.281 ஹெக்டேர் பரப்பளவுள்ள அந்தத் தோட்டத்தில், அனுமதியின்றி புகுந்த 21 பேரும், அங்கிருந்த இரும்பினால் ஆன தடைகளைச் சேதப்படுத்தி, பனை எண்ணெய் பழங்களை அறுவடை செய்ததாக அவர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கானது தண்டனைச் சட்டம் பிரிவுகள் 447 மற்றும் 427-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஷாரிஃப் ஷாய் தெரிவித்துள்ளார்.








