Nov 17, 2025
Thisaigal NewsYouTube
டோல் கட்டணம் அல்ல, வாகன அனுமதிக்கான கட்டணம்
தற்போதைய செய்திகள்

டோல் கட்டணம் அல்ல, வாகன அனுமதிக்கான கட்டணம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

கெந்திங் மலைக்குச் செல்லும் ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையில் விதிக்கப்படவிருக்கும் கட்டணம் டோல் அல்ல. அது அந்த சாலையைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்படும் நுழைவுக் கட்டணமாகும் என்று பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.

அந்த சுற்றுலா வாசஸ்தலத்திற்குச் செல்லும் ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலை, தனியாருக்குச் சொந்தமான பாதையாகும். அதனை அதனை கெந்திங் மலேசியா பெர்ஹாட் நிர்வகித்து வருகிறது.

நாட்டில் தற்போது நெடுஞ்சாலைகளில் உள்ள 33 ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே டோல் கட்டணத்தை விதித்து வருகின்றன. அந்தச் சுற்றுலாத் தலத்தை பயன்படுத்துகின்றவர்கள், வேலை செய்கின்றவர்கள், நில உரிமையாளர்கள் முதலியோர் அந்த சாலையைப் பயன்படுத்துவதற்கு நுழைவுக் கட்டணம் விதிக்கப்படவிருப்பதாக அஹ்மாட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

Related News