Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டிரெய்லர் லோரியின் சக்கரம் கழன்றதே விபத்திற்கான காரணமாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிரெய்லர் லோரியின் சக்கரம் கழன்றதே விபத்திற்கான காரணமாகும்

கோலாலம்பூர், டிச. 24-

மலாக்கா அலோர்காஜாவில் நேற்றிரவு நிகழ்ந்த கோர சாலை விபத்தில் எழுவர் மாண்டதற்கு, டிரெய்லர் லோரி ஒன்றின் சக்கரம் கழன்றதே முக்கிய காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

31 வயது ஓட்டுநர் செலுத்திய அந்த டிரெய்லர் லோரி, நெடுஞ்சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த போது திடீரென்று லோரியின் முன்புற வலது சக்கரம் கழன்று விட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஸாரி அபு சமா தெரிவித்தார்.

சாலையில் மூன்றாவது தடத்தில் 27 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, கழன்று ஓடிய அந்த சக்கரத்தின் மீது மோதி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசை தடத்தில் நுழைந்து எம்.பி.வி. வாகனம் உட்பட இதர வாகனங்களை மோதி தடம்புரண்டதாக அஸாரி அபு சமா குறிப்பிட்டார்.

இதில் எம்.வி. வாகனத்தில் ஐவரும், பேருந்தில் இருவரும் மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

எம்.பி.வி. வாகனத்தில் பயணம் செய்த 32 வயது கையிருல் இக்வான் மாசுப்பி, அவரின் 32 வயது மனைவி பாடஸிலின்னா ரம்லி, அவரின் 66 வயது தந்தை ரம்லி அ அப்துல் வஹாப், அவரின் துணைவியார், 2 வயது கைக்குழந்தை முகமட் ஒமார் , 56 வயது பேருந்து ஓட்டுநர் நுர்சினியன் காமிட் மற்றும் இன்னும் அடையாளம் காணப்படாத ஓர் பேருந்து பயணி ஆகியோர் இதில் மாண்டதாக அஸாரி அபு சமா அடையாளம் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்