சிங்கப்பூருக்கு நீரை விநியோகிப்பதில் மலேசியா தனக்கு இருக்கின்ற கடப்பட்டை மதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
குடிநீர் விநியோகிப்பில் அதன் கட்டணத்தை இலக்காக கொண்டு அதில் மட்டும் இரு நாடுகளும் கவனம் செலுத்துவதாக இருந்து விடக்கூடாது. மாறாக, ஜோகூருக்கும், சிங்கப்பூருக்கும் தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஜோகூர் ஆற்றில் எந்ததெந்த வகையில் நீரின் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என்பதில் மலேசியாவும், சிங்கப்பூரும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், இன்று மதியம் சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங்குடன் கூட்டாக இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.








