Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையைப் பயன்படுத்த நுழைவுக் கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையைப் பயன்படுத்த நுழைவுக் கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும்

Share:

குவாந்தான், நவம்பர்.15-

நாட்டின் முக்கிய சுற்றுலா வாசஸ்தலங்களில் ஒன்றான கெந்திங் மலைக்குச் செல்லும் ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையைப் பயன்படுத்துவதற்கு வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும் என்று பெந்தோங் எம்.பி. யங் ஷெஃபுரா ஒத்மான் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த கட்டண விதிப்பு நியாயமாக இருக்க வேண்டும் என்பதுடன் வாகனமோட்டிகளுக்கு இது பெரும் சுமையாக இருக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காராக் நெடுஞ்சாலையிலிருந்தும், பத்தாங் காலியிலிருந்தும் கெந்திங் மலைக்குச் செல்லும் சாலை, கெந்திங் மலேசியா பெர்ஹாட்டினால் தனிப்பட்ட முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அதே வேளையில் கெந்திங் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் விதிக்கக்கூடிய கட்டணம், வாகனமோட்டிகளுக்கு சுமையில்லாத வகையில் இருப்பது எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்பட வேண்டும் என்று யங் ஷெஃபுரா கேட்டுக் கொண்டார்.

கடல் மட்டத்திலிருந்து செங்குத்தாக அமைந்துள்ள சாலை மற்றும் சாலையொட்டி உள்ள மலைச்சாரல்களைப் பராமரிப்பதற்கு, தொடர்ந்து செலவினங்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் கெந்திங் மலைக்குச் செல்கின்ற அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று கெந்திங் மலேசியா பெர்ஹாட் அண்மையில் அறிவித்தது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்