Jul 12, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி வளாகத்தில் நச்சுப் பொருள் அருந்தியதாக சந்தேகம்: மாணவர் மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

பள்ளி வளாகத்தில் நச்சுப் பொருள் அருந்தியதாக சந்தேகம்: மாணவர் மருத்துவமனையில் அனுமதி

Share:

சுங்கை சிப்புட், ஜூலை.12-

பேராக் மாநிலம் சுங்கை சிபுட்டிலுள்ள பள்ளி வளாகத்தில் நச்சுப் பொருள் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அம்மாணவர் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டண்ட் A.W. Charon தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் குற்றச்செயலுக்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேவேளையில், மாணவரின் தனியுரிமையை மதித்து போலீஸ் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News