Sep 30, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் பழைய பெர்ரி சேவையை கொண்டு வரும் திட்டமில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் பழைய பெர்ரி சேவையை கொண்டு வரும் திட்டமில்லை

கோலாலம்பூர், ஜனவரி.12-

பினாங்கு பழைய 'ஐகானிக்' பெர்ரி சேவையை மீண்டும் தொடங்கும் திட்டம் ஏதுமில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

பழைய பெர்ரிகளை மீண்டும் இயக்குவதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் மற்றும் உதிரி பாகங்கள் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாடு ஆகியவற்றை அவர் முக்கிய காரணங்களாகக் குறிப்பிட்டார்.

பினாங்கில் உள்ள தற்போதைய பெர்ரி முனையங்கள் புதிய பெர்ரிகளின் செயல்பாட்டிற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டுள்ளன. எனவே, பழைய பெர்ரிகளை மீண்டும் கொண்டு வர வேண்டுமானால் புதிய முனையங்களை உருவாக்க வேண்டும்; அது தற்போது சாத்தியமில்லை என்று அந்தோணி லோக் விளக்கமளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →