தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெற நடக்கும் முயற்சியைப் பார்க்கும்போது, ஆளும் கட்சி இப்போது சற்று பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, பெர்சத்து கட்சியின் உறுப்பினர்களை கவர முயற்சிப்பதாக விவரித்தார் என அதன் துணைத் தலைவர் அஹ்மாட் ஃபைசால் அசுமு
"பெர்சாத்து அதிக கவனத்தையும் ஆதரவையும் பெறும்போது, எதிர்த்தரப்பினரனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறிய அவர், பெர்சத்து கட்சி வலுவிழந்து இருப்பதாகப் பார்க்கப்பட்டு கட்சியினரை எதிர்த்தரப்பினர் நெருங்கத் தொடங்கி இருப்பதாக ஃபைசால் அசுமு கூறினார்.
அரசியல் எதிரிகள் தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும்போது மட்டுமே அணுகுகிறார்கள் என்பதை நம்மில் சிலர் எப்போதும் மறந்துவிடுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.








