Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மற்றொரு ஆணுடன் உல்லாசத்தில் திளைத்திருந்த தனது மனைவியை தாக்கிய கணவர்
தற்போதைய செய்திகள்

மற்றொரு ஆணுடன் உல்லாசத்தில் திளைத்திருந்த தனது மனைவியை தாக்கிய கணவர்

Share:

போர்ட் டிக்சன், ஜூன் 25-

ஒரு தங்கும் விடுதியில் மற்றொரு ஆணுடன் உல்லாசத்தில் திளைத்திருந்த தனது மனைவியை தாக்கி காயம் விளைவித்ததாக நபர் ஒருவர் போர்ட் டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

37 வயது முகமட் ரித்வான் மாட் நசீர் என்ற அந்த நபர் மாஜிஸ்திரேட் உதுமான் அப்துல் கனி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் சிறை அல்லது கூடிய பட்சம் 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 352A பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த மே 24 ஆம் தேதி நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன் -னில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 38 வயது தனது மனைவியை தாக்கியதுடன் கன்னத்திலும் உடலிலும் பல காயங்களை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்